விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை
கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இங்கு படகில் செல்ல வேண்டும். அலைகள் நிறைந்த கன்னியாகுமரிகடலில் பயணம் செய்வது ஒரு த்ரில் அனுபவம் ஆகும். தமிழ்நாடு அரசின் பூம்புகார் போக்குவரத்துக்கழகம் இந்த படகு சர்வீசை நடத்துகிறது. லாட்ஜ்களில் ரூ.200 முதல் ரூ.ஆயிரம் வரையிலான கட்டணத்தில் அறைகள் உள்ளது.
படகு கட்டணம் - ரூ.20, விவேகானந்தர் மண்டப நுழைவு கட்டணம் - ரூ.10. பள்ளி மாணவர்கள் அத்தாட்சி கடிதத்துடன் வந்தால் படகு கட்டணம் பத்து ரூபாயும், மண்டப நுழைவு கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே. மண்டபத்திலுள்ள தியான அறையில் சற்று நேரம் அமர்ந்தால் மனஅமைதி கிடைக்கும். மண்டபத்தில் விவேகானந்தர், ராமகிருஷ்ணர் தொடர்பான பயனுள்ள புத்தகங்கள் கிடைக்கும்.

0 கருத்துரைகள்
Post a Comment