தமிழகத்தின் பழங்கால நினைவுசின்னங்களில் உதயகிரி கோட்டையும் ஒன்றாகும். 1729 முதல் 1758ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மார்த்தாண்ட வர்மரால் இந்த கோட்டை கட்டப்பட்டது.1741ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மர் குளச்சலில் டச்சுகாரர்களை தோற்கடித்தார். டச்சுகாரரான டி லெனோயின் சமாதி இந்த கோட்டையினுள் உள்ளது. முதலில் மன்னர் மார்த்தாண்ட வர்மரால் சிறைபிடிக்கப்பட்ட ஐரோப்பிய கைதிகளில் ஒருவராக இருந்த லெனோய், பின்னர் மன்னரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். மார்த்தாண்டரின் படைவீரர்களுக்கு ஐரோப்பிய போர்முறையை அவர் கற்று கொடுத்தார். கன்னியாகுமரியில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோட்டை சுற்றுலா தலமாக விளங்குகிறது.வள்ளி மலை கோயில்
மலை மீது அமைந்துள்ள சுமார் 300 படிகட்டுகளை கொண்ட இந்த கோயிலில் விநாயகர் மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. கோயில் மலையை குடைந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மலை மீது அமைந்துள்ள சுமார் 300 படிகட்டுகளை கொண்ட இந்த கோயிலில் விநாயகர் மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. கோயில் மலையை குடைந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்
Post a Comment