![]() |
முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய தீர்த்தம் அருகே இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காந்தியின் அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடம் இந்த மண்டபத்தின் அருகே உள்ளது. இந்த இடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாம் தேதி சூரிய ஒளி விழும். இங்கு பயணிகள் செல்ல கட்டணம் எதுவும் கிடையாது. செசருப்பு பாதுகாக்க மட்டும் 50 பைசா கட்டணம்.
காந்தி மண்டபம் அருகே காமராஜர் மணி மண்டபம் உள்ளது.
கன்னியாகுமரியில் சிப்பியால் செய்யப்பட்ட அலங்கார சாமான்கள் விசேஷம். ரூ.10 முதல் ரூ.500 வரை கிடைக்கும். இங்குள்ள சங்கிலி மண்டபத்தில் பயணிகள் பாதுகாப்பாக குளிக்கலாம். இந்த இடத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணமும் செசய்யலாம். குமரியிலுள்ள பகவதி அம்மன் கோயில் மிகவும் விசேஷமானது. இதன் கிழக்கு வாசசல் அடைக்கப்பட்டு, வடக்கு வாசல் திறந்திருக்கும். அம்பிகையின் மூக்குத்தி ஒளி கண்ணைப் பறிக்கும்.

0 கருத்துரைகள்
Post a Comment