பீர் முகமது தர்கா தக்கலையில் அமைந்துள்ளது. தத்துவ அறிஞர் முகமது அப்பாவின் பெயர் இந்த தர்காவிற்கு வைக்கப்பட்டுள்ளது. முகமது அப்பா திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பிறந்தவர். இவர் கேரள மாநிலம் பீர்மேட்டில் சிலகாலம் மதப்பணி செய்தார். பின் தக்கலையில் வந்து தங்கினார். சிறந்த கவிஞரான இவர் பல்வேறு தத்துவ புத்தகங்களை எழுதியுள்ளார்
Featured 1
Curabitur et lectus vitae purus tincidunt laoreet sit amet ac ipsum. Proin tincidunt mattis nisi a scelerisque. Aliquam placerat dapibus eros non ullamcorper. Integer interdum ullamcorper venenatis. Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis egestas.
Featured 2

Featured 3

Featured 4

Featured 5

பீர் முகமது தர்கா தக்கலை குமரி மாவட்டம்
பீர் முகமது தர்கா தக்கலையில் அமைந்துள்ளது. தத்துவ அறிஞர் முகமது அப்பாவின் பெயர் இந்த தர்காவிற்கு வைக்கப்பட்டுள்ளது. முகமது அப்பா திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பிறந்தவர். இவர் கேரள மாநிலம் பீர்மேட்டில் சிலகாலம் மதப்பணி செய்தார். பின் தக்கலையில் வந்து தங்கினார். சிறந்த கவிஞரான இவர் பல்வேறு தத்துவ புத்தகங்களை எழுதியுள்ளார்
வட்டகோட்டை குமரி மாவட்டம்
கன்னியாகுமரியில் இருந்து 6 கி.மீ தொலைவில் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட வட்டகோட்டை உள்ளது. நாஞ்சில் நாட்டின் பாதுகாப்பு கொத்தளமாக மார்த்தாண்ட வர்மரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. செவ்வக வடிவில்
பேச்சிபாறை அணை குமரி மாவட்டம்
கன்னியாகுமரியிலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கும் எல்லையாகஅமைந்துள்ள மலைத் தொடரை வைத்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் பெரிய அணை இதுவேயாகும். 1894 ஆம் ஆண்டு கோதையாறு அணைத்திட்டம் தொடங்கப்பட்டு 1905 இல் சுமார் 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கோதையாறு அணையே
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குமரி மாவட்டம்

: மிகவும் எளிமையாக கேரள பாரம்பரிய முறையில் பகவதி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை ஆரஞ்சு வண்ண ஓடுகளால் ஆனது. கடும் தலைவலி இருப்பவர்கள் அம்மனுக்கு அரிசி, வெல்லம், சேர்த்து செய்யப்படும் மண்டையப்பத்தை படைத்தால் தலைவலி தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 75 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 95 கி.மீ தொலைவிலும்பகவதி அம்மன் கோயில் உள்ளது. கோயிலிலேயே தங்கும் வசதியும் உள்ளது.
திற்பரப்பு அருவி குமரி மாவட்டம்
பத்மனாபபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் திற்பரப்பு அருவி உள்ளது. கோடை காலத்திலும் சிறிதாவது தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பம்சமாகும். இங்கு சிறுவர்கள் குளிக்க வசசதியாக சிறிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. இயற்கையான சூழ்நிலையில் இந்த அருவி அமைந்துள்ளது. நுழைவு கட்டணம் ரூ.3. வீடியோ கேமரா கட்டணமாக ரூ.75-ம், போட்டோ கேமரா கட்டணமாக ரூ.5-ம்
பத்மனாபபுரம் அரண்மனை குமரி மாவட்டம்

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் வழியில் தக்கலை அருகே 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரண்மனை அமைந்துள்ளது. திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டிய இந்த அரண்மனை முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டதாகும்.
பழங்கால மன்னர் மற்றும் வாழ்க்கை முறையை படம் பிடித்து காட்டும்
விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை குமரி மாவட்டம்
கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இங்கு படகில் செல்ல வேண்டும். அலைகள் நிறைந்த கன்னியாகுமரிகடலில் பயணம் செய்வது ஒரு த்ரில் அனுபவம் ஆகும். தமிழ்நாடு அரசின் பூம்புகார் போக்குவரத்துக்கழகம்
காந்தி மண்டபம் குமரி மாவட்டம்
![]() |
முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய தீர்த்தம் அருகே இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காந்தியின் அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடம் இந்த மண்டபத்தின் அருகே உள்ளது. இந்த இடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாம் தேதி சூரிய ஒளி விழும். இங்கு பயணிகள் செல்ல கட்டணம் எதுவும் கிடையாது. செசருப்பு பாதுகாக்க மட்டும் 50 பைசா கட்டணம்.
காந்தி மண்டபம் அருகே காமராஜர் மணி மண்டபம் உள்ளது.
கேரளாபுரம் குமரி மாவட்டம்
கேரளபுரம் தக்கலைக்கு அருகில் உள்ளது. இங்குள்ள கோயிலில் உள்ள விநாயகர் சிலை நிறம் மாறும் தன்மையுடையதாக உள்ளது. ஆறுமாத காலம் கருப்பாகவும், அடுத்த ஆறுமாத காலம் வெள்ளையாகவும் சிலை காட்சியளிக்கிறது.
மருத்துவமலை
சோட்டவிளை பீச்
கன்னியாகுமரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இயற்கையான கடற்கரை பகுதி சோட்டவிளை பீச் ஆகும். சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு கடில்கள், கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையை ஒட்டி அமைந் துள்ள சாலையில் செல்வது மிகவும் ரம்மியமாக இருக்கும்.
செயின்ட் சேவியர் சர்ச்
நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ தொலைவில் செயின்ட் சேவியர் சர்ச் அமைந்துள்ளது. கி.பி 1600 ஆண்டு இந்த சர்ச் கட்டப்பட்டது. 1865ம் ஆண்டு மரியன்னைக்காக புதிய சன்னதி கட்டப்பட்டது. 1930ம் ஆண்டு இந்த சர்ச் கதீட்ரல் அந்தஸ்து பெற்றது. 1955ம் ஆண்டு சர்ச் கட்டடம் விரிவாக்கப்பட்டது.
உதயகிரி கோட்டை
தமிழகத்தின் பழங்கால நினைவுசின்னங்களில் உதயகிரி கோட்டையும் ஒன்றாகும். 1729 முதல் 1758ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மார்த்தாண்ட வர்மரால் இந்த கோட்டை கட்டப்பட்டது.1741ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மர் குளச்சலில் டச்சுகாரர்களை தோற்கடித்தார். டச்சுகாரரான டி லெனோயின் சமாதி இந்த கோட்டையினுள் உள்ளது. முதலில் மன்னர் மார்த்தாண்ட வர்மரால் சிறைபிடிக்கப்பட்ட ஐரோப்பிய கைதிகளில் ஒருவராக இருந்த லெனோய், பின்னர் மன்னரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். மார்த்தாண்டரின் படைவீரர்களுக்கு ஐரோப்பிய போர்முறையை அவர் கற்று கொடுத்தார். கன்னியாகுமரியில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோட்டை சுற்றுலா தலமாக விளங்குகிறது.மலை மீது அமைந்துள்ள சுமார் 300 படிகட்டுகளை கொண்ட இந்த கோயிலில் விநாயகர் மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. கோயில் மலையை குடைந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காளிகேசம்